ADDED : நவ 08, 2024 08:27 PM

புதுடில்லி:மத்திய அரசின் ஊழியர் நலன், குடியிருப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ், புதிய குடியிருப்பு திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது.
மொகாலி எஸ்.ஏ.எஸ். நகர் 79வது செக்டாரில் 402 வீடுகள் கட்டுவதற்காக, மத்திய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக பொருளாதார ஆலோசகர் தினேஷ் கபிலா, தலைமை நிர்வாகி ககன் குப்தா, நிதி இயக்குனர் ரமேஷ் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
அப்போது, தினேஷ் கபிலா பேசும்போது, “இந்தக் குடியிருப்பு திட்டத்தால் மத்திய அரசு ஊழியர்களின் இருப்பிட தேவை தீரும்,”என்றார். பூமி பூஜை, அடிக்கல் நாட்டுதலைத் தொடர்ந்து, விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. திட்டத்தின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் ஒதுக்குவது குறித்து இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகும். அறிவிக்கப்படும்.