நவம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்
நவம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்
ADDED : அக் 27, 2025 03:11 PM

புதுடில்லி: சந்திரயான் 3 அனுப்பிய LVM3-M5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 4,400 கிலோகிராம் எடையை சிஎம்எஸ்-03 கொண்டது.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். கடல் பகுதி முழுவதும் தகவல் தொலைத் தொடர்பு கவரேஜை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது.தற்போது, ஏவுதலுக்கு முந்தைய நடவடிக்கைகள் இப்போது தொடங்கிவிட்டன. மேலும் ராக்கெட் முழுமையாக இணைக்கப்பட்டு அக்டோபர் 26ம் தேதி ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் இந்தியாவின் பலத்தை உறுதிப்படுத்தும். மனித விண்வெளிப் பயண திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

