ADDED : ஆக 04, 2025 11:52 PM
பாகல்பூர்: பீஹாரில், கன்வார் யாத்திரை சென்ற கார் சாலையோர குட்டையில் கவிழ்ந்ததில், ஐந்து பக்தர்கள் உயிரிழந்தனர்.
பீஹாரின் பாகல்பூர் மாவட்டம், சாகுன்ட் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் கன்வார் யாத்திரை சென்றனர்.
அவர்கள் சுல்தான்கஞ்ச் பகுதி கங்கை ஆற்றில் புனித நீரை எடுத்துக்கொண்டு, பங்கா மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அப்போது கனமழை பெய்ததை பொருட்படுத்தாமல் காரை டிரைவர் அதிவேகமாக இயக்கியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர குட்டையில் கவிழ்ந்தது.
போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் ஐந்து பேரையும் மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், ஐந்து பக்தர் களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தில் கார் மின் ஒயரில் உரசியதால் மின்சாரம் தாக்கி பக்தர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதை, கலெக்டர் விகாஷ் குமார் மறுத்தார்.