தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கூட்டத்திற்குள் புகுந்தது பஸ்; பீஹாரில் 5 பேர் உயிரிழப்பு

கூட்டத்திற்குள் புகுந்தது பஸ்; பீஹாரில் 5 பேர் உயிரிழப்பு

கூட்டத்திற்குள் புகுந்தது பஸ்; பீஹாரில் 5 பேர் உயிரிழப்பு


UPDATED : ஆக 22, 2026 09:20 PM

ADDED : ஆக 22, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2026 09:20 PM ADDED : ஆக 22, 2026 07:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா:பீஹாரில், இசை நிகழ்ச்சியை ரசித்து கொண்டிருந்த கூட்டத்திற்குள் பஸ் புகுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீஹாரின் மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நோக்கி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பீஹாரின் லவுரியா அருகேயுள்ள பருவ் டோலா பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை வேறுதிசையில் டிரைவர் திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இசை நிகழ்ச்சியை ரசித்து கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பஸ் மோதி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் சிலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பலியான ஐந்து உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் லவுரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்.

இதற்கிடையே தப்பியோடிய பஸ் மற்றும் லாரி டிரைவர்களை போலீசார் தேடிவருகின்றனர். விபத்து பற்றி அறிந்த பா.ஜ.,வை சேர்ந்த பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us