தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி காங்., வரலாற்றில் சட்டசபையில் ஒரே எம்.எல்.ஏ.,

புதுச்சேரி காங்., வரலாற்றில் சட்டசபையில் ஒரே எம்.எல்.ஏ.,

புதுச்சேரி காங்., வரலாற்றில் சட்டசபையில் ஒரே எம்.எல்.ஏ.,


ADDED : ஆக 22, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி காங்., வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆதரவின்றி ஒரே காங்., எம்.எல்.ஏ., மட்டும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கிறார்.

புதுச்சேரி சட்டசபை முதல் கூட்டத்தொடர், முதல் முறையாக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில், கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் நாளை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மாலையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதன் பின், ஐந்து நாட்கள் வரை கூட்டத்தொடர் நடக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி காங்., வரலாற்றில் முதல்முறையாக ஊசுடு தொகுதி வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.,வான கார்த்திகேயன் கூட்டணி கட்சி ஆதரவுவின்றி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளார். தற்போது இண்டி கூட்டணி உடைந்து போனதால், தமிழக தி.மு.க.‌, தலைமை பா.ஜ.,வுடன் கூட்டணியில் சேர ஆர்வம் காட்டி வருதாக கூறப்படுகிறது.

இதனால் புதுச்சேரியில் உள்ள தி.மு.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் காங்.,க்கு எதிராக தனி அணியாகவே சட்டசபையில் செயல்படுவார்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் காங்., எம்.எல்‌.ஏ., கார்த்திகேயன் மட்டுமே தனியாகவே இந்தக் கூட்டத் தொடரை சந்திக்க வேண்டும். அவர், கூட்டணி பலத்துடன் உள்ள முதல்வர் ரங்கசாமி அரசை தனி ஒருவராக புதுச்சேரி மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எப்படி எதிர்கொள்ள போகிறார் எனும் பரிதாப நிலையில் உள்ளது புதுச்சேரி காங்., கட்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us