ADDED : ஆக 22, 2026 07:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்குவதை முன்னிட்டு, கூட்ட அரங்கை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி, 16வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (24ம் தேதி) காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. அதில், காலை கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். மதியம் முதல்வர் ரங்கசாமி, 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கவர்னர் மற்றும் முதல்வரின் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளதை முன்னிட்டு சட்டசபையில் உள்ள கூட்ட அரங்கினை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது. எம்.எல்.ஏ.,க்களுக்கான இருக்கைகள் அமைப்பது, ஒலிபெருக்கி, டேப், ஏ.சி., உள்ளிட்ட சாதனங்கள் சரியாக உள்ளதா என, ஆய்வு செய்து, சட்டசபை செயலர் தயாளனிடம் கேட்டறிந்தார்.
