ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி
ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி
ADDED : மே 04, 2025 05:25 PM

பிரகாசம்: ஆந்திராவில் இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலியாகினர்.
பிரகாசம் மாவட்டத்தில் கொப்போலு அருகே கிம்ஸ் மருத்துவமனை அருகே முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
அதே நேரத்தில் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், மற்றொரு லாரியின் பின்னால் மோதியது. கார் முற்றிலும் சிதைந்து போக, விபத்தில் 3 பேர் பலியாகினர்.
விபத்தில் சிக்கிய கார், குண்டூரில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. போலீசார் விசாரணையில் கார் விபத்தில் பலியானவர்கள் பெயர்கள் பவானி, சந்திரசேகர், வெங்கடேஸ்வரலு என்பது தெரிய வந்தது.
ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

