ADDED : செப் 06, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாராயண்பூர்:சத்தீஸ்கரின் நாராயண்பூர் - -தண்டேவாடா எல்லையில் உள்ள அபுஜ்மத் என்ற அடர்ந்த வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, அந்த பகுதியை நம் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பெண் உட்பட ஐந்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.