ADDED : ஏப் 30, 2025 06:40 AM
மலப்புரம் : கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவருக்கு சியா என்ற 5 வயது மகள் இருந்தார்.
கடந்த மார்ச் 29ம் தேதி, வீட்டின் அருகே சியா விளையாடி கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய், சியாவின் தலை மற்றும் கால் பகுதிகளில் கடித்து குதறியது.
படுகாயம் அடைந்த சியாவை, உடனே அவரது பெற்றோர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் சியாவை பரிசோதித்ததில், ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு ரேபீஸ் தடுப்பூசியை செலுத்தினர். எனினும், சியாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசம்அடைந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சியா நேற்று உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்தியும் சிறுமி உயிரிழந்ததற்கு, அவரது கழுத்தின் மேற்பகுதியில் நாய்க்கடியால் ஏற்பட்ட காயங்கள் ஆழமாக பதிந்ததே காரணம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

