ADDED : மார் 07, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், தலைநகர் ஜெய்ப்பூர் உட்பட மாநிலத்தின் ஏழு பெரிய நகரங்களில் இயக்க, 500 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது.
டில்லியில்தான் அதிகளவில் மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, ராஜஸ்தானிலும் 500 மின்சார பஸ்கள் வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி உத்தரவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, அஜ்மீர், பிகானீர், பரத்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்களில் மின்சார பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

