அசாம் காங்.க்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளின் 5000 சமூக ஊடக கணக்குகள்; முதல்வர் குற்றச்சாட்டு
அசாம் காங்.க்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளின் 5000 சமூக ஊடக கணக்குகள்; முதல்வர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 20, 2025 05:11 PM

திஸ்பூர்; இஸ்லாமிய நாடுகளில் உள்ள 5000 சமூக ஊடக கணக்குகள் மூலம் அசாம் மாநில காங்கிரஸ் ஊக்குவிக்கப்படுவதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
47 நாடுகளைச் சேர்ந்த இந்த சமூக வலைதள கணக்குகளில் அதிக எண்ணிக்கையிலானவை வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவை.
இந்த பக்கங்கள் கடந்த ஒரு மாதமாக ஒரு குறிப்பிட்ட அசாம் மாநில காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் பக்கங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றது. ராகுல் மற்றும் காங்கிரசின் பதிவுகளுக்கு அவர்கள் கருத்து தெரிவிக்கவோ, விரும்புவதோ இல்லை என்பது மிகவும் ஆச்சரியம்.
இதுதவிர, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய கருத்துகள், பாலஸ்தீனம் ஆதரவு கருத்துகள், ஈரான், வங்கதேச ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் பற்றிய பதிவுகளும் அதிக அளவில் வெளியாகின்றன.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அசாம் மாநில அரசியலில் முதல் முறையாக வெளிநாட்டு ஈடுபாடு இருக்கிறது. இது ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் இதுபற்றி மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.