sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

189 சட்டசபை தொகுதிகளில் சாலை மேம்படுத்த ரூ.5,200 கோடி

/

189 சட்டசபை தொகுதிகளில் சாலை மேம்படுத்த ரூ.5,200 கோடி

189 சட்டசபை தொகுதிகளில் சாலை மேம்படுத்த ரூ.5,200 கோடி

189 சட்டசபை தொகுதிகளில் சாலை மேம்படுத்த ரூ.5,200 கோடி


ADDED : பிப் 17, 2024 04:57 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்


l 'பிரகதி பாத்' திட்டத்தின் கீழ் 189 சட்டசபை தொகுதிகளில், தலா 50 கிலோ மீட்டர் என 9,450 கிலோ மீட்டர் துாரத்திற்கு, சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக 5,200 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது

l பிரதமரின் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், கல்யாண கர்நாடகாவில் 1,150 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படும். இதற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது

l நரேகா திட்டத்தை செயல்படுத்துவதில், கர்நாடகா முன்னணி மாநிலமாக உள்ளது. இதன்மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அறிவு மையங்கள்


l சொந்த கட்டடத்தில் அறிவு மையங்கள் கட்டுவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் 132 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும், டிஜிட்டல் அலுவலகங்கள், இ - ஆபீஸ் துவக்கப்படும்

l பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி, கிராம பஞ்சாயத்து செயலர்கள் பணியிட மாற்றம் கவுன்சலிங் அடிப்படையில் செய்யப்படும்

l அரசின் அனைத்து திட்டங்களை பெறுவதற்கு, முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் சேவா சிந்து இணைய செயலிக்காக, பாபுஜி சேவா சென்டர் என்ற பெயரில் அலுவலகங்கள் திறக்கப்படும்

l கிராம பஞ்சாயத்து கூட்டங்கள், கிராமசபை கூட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சோலார் தெரு விளக்கு


l 'ஹொம்பேலகு' திட்டத்தின் கீழ் 50 கிராம பஞ்சாயத்துகளில், 25 கோடி ரூபாய் செலவில் சோலார் தெரு விளக்குகள் பொருத்தப்படும்

l 200 கிராம பஞ்சாயத்துகளில் தானாக அளவீடு செய்யும், தெரு விளக்குகள் பொருத்தப்படும்

l அரசால் தேர்வு செய்யப்படும் 100 கிராம பஞ்சாயத்துகளில், நோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் மூத்த குடிமக்கள் பயனடைவர்

l 'பிரேரனா' திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்தில் பணியாற்றும் பெண்கள், துாய்மை பணி செய்யும் பெண்கள், கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய் கோப்பை வழங்கப்படும்.

l அரசால் தேர்வு செய்யப்படும் 100 கிராம பஞ்சாயத்துக்களில் வசிக்கும், பெண்களின் திறன் அறிவை வளர்க்க, சாவித்ரிபாய் புலே பெண்கள் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.

பொருளாதார ஆய்வகம்


l நாட்டின் முதல் பொருளாதார ஆய்வகம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் இருந்து தேர்வு செய்யப்படும், உறுப்பினர்களுக்கு இங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

l கல்யாண கர்நாடகாவில் 1,000 கிராம பஞ்சாயத்துகளில், 'நன்ன குருத்து' என்ற பெயரில் புதிய திட்டம் துவங்கப்படும். சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும், இந்த திட்டம் அரசு ஆவணங்களை பாதுகாக்க உதவும்.






      Dinamalar
      Follow us