ADDED : டிச 13, 2025 12:28 AM

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, 5,945 இந்தியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். போர், பேரிடர் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்த அவர்கள், துாதரகங்கள் உதவியுடன், சிறப்பு விமானங்கள் வாயிலாக நம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,
வக்ப் சொத்துகள் மாயம்
வக்ப் சொத்துகளை பதிவு செய்ய துவங்கப்பட்ட, 'உமீத்' தளத்தில், 3.55 லட்சம் வக்ப் சொத்துகள் மாயமாகியுள் ளன. ஜம்மு - காஷ்மீரில் ம ட்டும், 7,240 சொத்துகள் கா ணாமல் போயுள்ள ன. இந்த இடைவெளி வக்ப் சொத்துகள் குறித்த வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகா ப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
மிகப்பெரிய ஊக்கம்
நாட்டில் சாலைகள் மற்றும் பிற பயணம் தொடர்பான உள்கட்டமைப்புகளில் கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம், ஆன்மிக சுற்றுலா விற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. கடந்த 2014ல், 18,000 கி.மீ., நீளம் இருந்த நான்குவழிச் சாலைகள், இரண்டரை மடங்கு அதிகரித்து, 48,200 கி.மீ., து ாரம் விரிவடைந்துள்ளது.
கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய அமைச்சர், பா.ஜ.,

