உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 17, 2026 09:07 AM

அ நிறம் | அளவு
- நமது நிருபர் -
உத்தராகண்டின் டெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள குலார் பஜார் அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தது. 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.
