தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு

அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு

அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு


ADDED : செப் 13, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, செப். 14–

டில்லியில், ஹாஸ்டல் கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியானதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட, 67 கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடம், கடந்த 6ல் திடீரென இடிந்ததில் ஏழு பேர் பலியாகினர். விசாரணையில், கட்டுமானத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து, டில்லி முழுதும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 11, 12 ஆகிய நாட்களில் நடந்த சோதனையின் முடிவில், 67 கட்டடங்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

அந்த கட்டடங்களை டில்லி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். மேலும், ஒன்பது கட்டடங்களுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. நஜப்கர், ஷஹ்தாரா வடக்கு பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us