ADDED : செப் 13, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் மகள், காவியா, 20; இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 10 ம் தேதி, கல்லுாரிக்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவரது பெற்றோர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
