ADDED : அக் 13, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:வடகிழக்கு டில்லியில், நள்ளிரவு நடத்திய வாகன சோதனையில், 675 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோகல்புரி போலீசார் நேற்று முன் தினம் நள்ளிரவில் வாகன சோதனை நடத்தினர். லாரி ஒன்றில் இருந்த 675 கிலோ பட்டாசுகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நூர் முஹமது,42, கைது செய்யப்பட்டார். டில்லியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பட்டாசுகளை எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.