மஹா.,வில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதல்: 7 பேர் பலி
மஹா.,வில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதல்: 7 பேர் பலி
UPDATED : நவ 13, 2025 09:27 PM
ADDED : நவ 13, 2025 09:25 PM

புனே: மஹாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.
புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில், உள்ள சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் ஒரு சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்தில் வாகனங்களில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால்,அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

