sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 டில்லியில் மண் சரிந்து 7 பேர் உயிரிழப்பு

/

 டில்லியில் மண் சரிந்து 7 பேர் உயிரிழப்பு

 டில்லியில் மண் சரிந்து 7 பேர் உயிரிழப்பு

 டில்லியில் மண் சரிந்து 7 பேர் உயிரிழப்பு


ADDED : மார் 11, 2026 03:00 AM

Google News

ADDED : மார் 11, 2026 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம், :ஹரியானாவின் குருகிராமில் கட்டுமான பணியின் போது திடீரென மண் குவியல் சரிந்து விழுந்து ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஹரியானாவின் சேர்ந்த குருகிராமில் உள்ள சித்ரவாலி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று, கழிவுநீர் அகற்றும் திட்டத்துக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் இங்கு 15 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென மண் குவியல் சரிந்து விழுந்ததில் ஏழு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், அங்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

மண்ணில் புதைந்திருந்த ஷிவசங்கர், பரமேஸ்வர் மாதோ, மங்கள் மாதோ, பகீரத் கோப், சதீஷ், சஞ்சீவ் கோப், தனஞ்செய் மாதோ ஆகியோரை ராஜஸ்தானில் உள்ள பிவாடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏழு பேரும் மூச்சுத் திணறல் காரணமாக இறந்து விட்டதாக அறிவித்தனர்; நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் மூவர் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்தவர்கள்.






      Dinamalar
      Follow us