ADDED : அக் 06, 2024 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஜ்னோர்:உத்தர பிரதேசத்தில் 7 மயில்கள் இறந்து கிடந்தன. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என விசாரிக்கின்றனர்.
உ.பி.,யின் பிஜ்னோர் மாவட்டம் பிக்காவாலே கிராம வயலில் நேற்று முன் தினம் மாலை ஒரு பெண் மயில் உட்பட 7 மயில்கள் இறந்து கிடந்தன. தகவல் அறிந்து, வனத்துறை அதிகாரி கியான் சிங் தலைமையில் வனத்துறையினர் வந்தனர். மயில் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், மயில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என கியான் சிங் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.