லோக்சபாவுக்கு 7 கட்ட தேர்தல்!: ஏப்.,19 துவங்கி ஜூன் 1 முடிகிறது
லோக்சபாவுக்கு 7 கட்ட தேர்தல்!: ஏப்.,19 துவங்கி ஜூன் 1 முடிகிறது
UPDATED : மார் 18, 2024 01:11 AM
ADDED : மார் 16, 2024 11:56 PM
மூன்றாவது முறையாக பிரதமராகி நரேந்திர மோடி வரலாறு படைப்பாரா என்பதை தீர்மானிக்கும், 18வது லோக்சபாவுக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று டில்லியில் வெளியிட்டார். குடிமக்கள் சுதந்திரமாக ஓட்டுரிமையை பயன்படுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகள்
முதற்கட்டம்
அருணாச்சல பிரதேசம் (2), அசாம் (5), பீஹார் (4), சத்தீஸ்கர் (1), ம.பி., (6), மஹாராஷ்டிரா (5), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழகம் (39), திரிபுரா (1), உ.பி., (8), உத்தரகண்ட் (5), மே. வங்கம் (3), அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் (1), ஜம்மு - காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1)
இரண்டாம் கட்டம்
அசாம் (5), பீஹார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), ம.பி., (7), மஹாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), திரிபுரா (1), உ.பி., (8), மே. வங்கம் (3), ஜம்மு - காஷ்மீர் (1)
மூன்றாம் கட்டம்
அசாம் (4), பீஹார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் (26), கர்நாடகா (14), ம.பி., (8), மஹாராஷ்டிரா (11), உ.பி., (10), மே.வங்கம் (4), தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி, டாமன் மற்றும் டையூ (2), ஜம்மு - காஷ்மீர் (1)
நான்காம் கட்டம்
ஆந்திரா (25), பீஹார் (5), ஜார்க்கண்ட் (4), ம.பி., (8), மஹாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உ.பி., (13), மே.வங்கம் (8), ஜம்மு -காஷ்மீர் (1)
ஐந்தாம் கட்டம்
பீஹார் (5), ஜார்க்கண்ட் (3), மஹாராஷ்டிரா (13), ஒடிசா (5), உ.பி., (14), மே. வங்கம் (7), ஜம்மு - காஷ்மீர் (1), லடாக் (1)
ஆறாம் கட்டம்
பீஹார் (8), ஹரியானா (10), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (6), உ.பி., (14), மே. வங்கம் (8), டில்லி (7)
ஏழாம் கட்டம்
பீஹார் (8), ஹிமாச்சல் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உ.பி., (13), மே. வங்கம் (9), சண்டிகர் (1)
செலவு என்ன தெரியுமா?
* லோக்சபா தேர்தல் செலவு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க தேர்தல் செலவும் நமது தேர்தல் செலவும் சமம். இங்கே பணமாகவும், பொருளாகவும் கொடுக்கும் லஞ்சம் இந்த கணக்கில் வராது

* இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா ஆகியவற்றின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது தான். என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 67 சதவீதம் பேர் தான் ஓட்டு போட்டுள்ளனர்
* அறிவிப்பு வெளியான நேற்று முதல் ரிசல்ட் வெளியாகும் வரை 82 நாட்கள் நடக்கிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா
* தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள் 2,660. அத்தனை கட்சிகள் களம் இறங்கியும், சென்ற தேர்தலில் ஒரு தொகுதியாவது ஜெயித்த கட்சிகள் வெறும் 67 தான்
* வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அந்த விபரங்களை முக்கிய நாளிதழ்களில் விளம்பரமாக மூன்று நாட்கள் வெளியிட வேண்டும்.தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த உறுதி எடுத்துள்ளோம். தேர்தலின் போது, நாட்டின் எந்த பகுதியிலாவது வன்முறை நடந்தால், அதை, தயவு தாட்சண்யம் இன்றி அடக்குவோம்.

