ADDED : ஜூலை 31, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரா:நகை வியாபாரி காரை மறித்து, 70 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த நகை வியாபாரி, தன் இரு மகன்களுடன் ஆக்ராவில் இருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை, தேசிய நெடுஞ்சாலை -19ல், ஹிந்துஸ்தான் கல்லுாரி அருகே, ஜீப் மற்றும் பைக் ஆகியவற்றில் வந்தவர்கள், காரை மறித்தனர்.
நகை வியாபாரி மற்றும் அவரது மகன்களை மிரட்டி, காரில் இருந்த, 70 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்த புகாரின்படி, பரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கொள்ளையரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.