ADDED : அக் 17, 2024 08:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுகாத்தி: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து மும்பை செல்லும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.இன்று மாலை லும்திங் - பர்தர்பூர் ரயில் நிலையங்கள் இடையே இவ்விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.விபத்தைத் தொடர்ந்து உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.