UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:26 PM
மும்பை: மஹாராஷ்ராவின் ராய்காட்டுக்கு, சுற்றுலா சென்ற புனே தனியார் பயிற்சி மைய மாணவர்கள் எட்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஆளந்தி பகுதியை சேர்ந்த, ‘வின்னர்ஸ் அகாடமி’ என்ற தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் பிளஸ் – 1 மற்றும் பிளஸ் – 2 மாணவர்கள், ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவேகர் கடற்கரைக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.
மொத்தம், 25 மாணவர்கள், 17 மாணவியர், ஆறு ஆசிரியர்கள் என 48 பேர் அடங்கிய அந்த குழுவினர் திவேகர் பகுதியில் உள்ள டிகி சகாரி கடற்கரையில் இறங்கி குளித்தனர். அப்போது, ஆழமான பகுதியில் குளித்த எட்டு மாணவர்கள் அதிவேக அலையில் அடித்து செல்லப்பட்டனர்.
இது பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த நீர் விளையாட்டு குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் உதவியுடன் போலீசார் கடலில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது எட்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
