ADDED : ஜன 01, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலால் ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக, 841 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய, 24 மணி நேரத்தில், 841 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஉள்ளது, பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 227 நாட்களுக்குப் பின் அதிகரித்துஉள்ளது.
கடந்த, மே 19ம் தேதி, 865 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
தற்போது, 4,309 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய, 24 மணி நேரத்தில், கேரளா, கர்நாடகா, பீஹாரில் தலா ஒருவர் என, மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.