sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமானங்கள் ரத்தால் பாதித்த பயணியருக்கு ரூ.10,000க்கு பரிசு கூப்பன் தரும் 'இண்டிகோ'

/

விமானங்கள் ரத்தால் பாதித்த பயணியருக்கு ரூ.10,000க்கு பரிசு கூப்பன் தரும் 'இண்டிகோ'

விமானங்கள் ரத்தால் பாதித்த பயணியருக்கு ரூ.10,000க்கு பரிசு கூப்பன் தரும் 'இண்டிகோ'

விமானங்கள் ரத்தால் பாதித்த பயணியருக்கு ரூ.10,000க்கு பரிசு கூப்பன் தரும் 'இண்டிகோ'

3


ADDED : டிச 12, 2025 12:38 AM

Google News

3

ADDED : டிச 12, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: 'இண்டிகோ' விமானங்களின் தொடர் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணியருக்கு கட்டணத்தை திரும்ப வழங்கிய அந்நிறுவனம், அவர்களுக்கு கூடுதல் சலுகையாக, 10,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண வவுச்சர்களை வழங்க துவங்கியுள்ளது.

விமான இயக்கத்தின் பாதுகாப்பு கருதி, விமானிகள் மற்றும் ஊழியர்களின் பணிநேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதனால், 'இண்டிகோ' நிறுவனம் ஊழியர் பற்றாக்குறையை சந்தித்தது.

இதன் காரணமாக, டிசம்பர் முதல் வாரத்தில் நாடு முழுதும் இண்டிகோ விமானங்கள் முடங்கின. குறிப்பாக, டிச., 3 - 5 வரை நாள் ஒன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட விமான பயணியர் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பயணியரின் நலன் கருதி இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட விதியில் தற்காலிக தளர்வு வழங்கியது. பயணியருக்கு முழு கட்டணத்தையும் திரும்ப செலுத்த உத்தரவிட்டது. அதற்கான நடவடிக்கையை நிறுவனம் துவங்கிவிட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணியருக்கு 10,000 ரூபாய்க்கான இலவச பயண கூப்பன் வழங்கி, கூடுதல் சலுகையும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 3 முதல் 5ம் தேதி வரை இண்டிகோவில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணியர், விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்ததையும், அவர்களில் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறோம்.

இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்ட பயணியருக்கு அரசு வழிகாட்டுதல்படி விமான தாமதத்தின் அடிப்படையில், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். இது தவிர, 10,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண கூப்பன்கள் வழங்கப்படும். இந்த கூப்பன்களை, அடுத்த 12 மாதங்கள் வரை இண்டிகோவில் பயணம் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us