பள்ளிகள், பி.யூ.சி., கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.850 கோடி
பள்ளிகள், பி.யூ.சி., கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.850 கோடி
ADDED : பிப் 17, 2024 04:52 AM
l மாநில அரசு பள்ளிகள், பி.யூ.சி., கல்லுாரிகளில், அடிப்படை வசதிகள் செய்ய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. 2023 - 24ம் ஆண்டில், 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2024 - 25ம் ஆண்டில் பள்ளி, கல்லுாரிகளில் வகுப்பறைகள் கட்டுவது, பழுது நீக்குவது, கழிப்பறை கட்டுவது உட்பட மற்ற பணிகள் 850 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
கர்நாடக பப்ளிக் பள்ளிகள்
l நர்சரி முதல், பி.யூ.சி., வரையிலான கல்வி, ஒரே கூரையின் கீழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முக்கியமான பள்ளிகள், கர்நாடக பப்ளிக் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது
l கல்வியில் பின் தங்கிய, ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் திறனை அதிகரிக்க, 10 கோடி ரூபாய் செலவில், திட்டம் செயல்படுத்தப்படும்
l மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள, அரசு உயர்நிலை பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம், கணினி லேப், இணைய தளம் வசதிகள் செய்ய, 50 கோடி ரூபாய் செலவிடப்படும்
l கன்னடம், ஆங்கிலம் என, இரண்டு மொழிகள் கொண்ட 2,000 அரசு தொடக்கப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
நாங்களும் மனிதர்கள்
l அனைத்து பள்ளிகளிலும், சமூக ஒற்றுமை, சமத்துவ மனப்பான்மை உட்பட, நல்ல விஷயங்கள் அடங்கிய பள்ளிகளாக மாற்ற, 'நாங்களும் மனிதர்கள்' என்ற பெயரில், நிகழ்ச்சி நடத்தப்படும். பள்ளி, கல்லுாரிகளில் வாரத்தில் இரண்டு மணி நேரம், கருத்தரங்கு என, பல நிகழ்ச்சிகள் நடக்கும்
l கல்யாண கர்நாடகா வளர்ச்சி ஆணைய ஒருங்கிணைப்பில், அரசு உயர்நிலைப் பள்ளி, பி.யூ.சி., கல்லுாரிகள் துவக்கப்படும்
l மாநிலத்தில் உள்ள, 74 ஆதர்ஷ வித்யாலயா பள்ளிகள், தரம் உயர்த்தப்படும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முக்கியமான 100 பி.யூ.சி., கல்லுாரிகளில் 10 கோடி ரூபாய் செலவில், கணித அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும்
l அறிவியலை பாடமாக கொண்ட, 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பி.யூ.சி., கல்லுாரிகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்க, தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்
நீட், சி.இ.டி., தேர்வு பயிற்சி
l அரசு பி.யூ.சி., கல்லுாரிகளில், அறிவியல் பிரிவில் படிக்கும், 20,000 மாணவர்களுக்கு நீட், சி.இ.டி., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, 10 கோடி ரூபாய் செலவிடப்படும்
l மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வசதி செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 46,829 அரசு பள்ளிகள், 1,234 பி.யூ.சி., கல்லுாரிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டத்துக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படும்
l காலியாக உள்ள, அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், பி.யூ.சி., கல்லுாரிகளின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்.