ADDED : அக் 23, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஓங்கல்லுார் பகுதியில் உள்ள நிலங்களில், காட்டு பன்றிகளின் தொந்தரவு அதிகமுள்ளது. இவை நெல் உள்ளிட்ட சாகுபடி பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் புகார்களை தொடர்ந்து, ஓங்கல்லுார் ஊராட்சி குழுவினர், காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், லைசன்ஸ் உள்ள துப்பாக்கி சுடுவோர் தலைமையில், 18 மணி நேரத்தில் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளிலிருந்த, 87 காட்டு பன்றிகள் சுட்டு கொல்லப்பட்டன.