கார்ட்டூன் பார்த்தபோது அதிர்ச்சி! 9 வயது சிறுவன் கையில் வெடித்த செல்போன்
கார்ட்டூன் பார்த்தபோது அதிர்ச்சி! 9 வயது சிறுவன் கையில் வெடித்த செல்போன்
ADDED : செப் 01, 2024 11:19 AM

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வயல்வேலை
இதுபற்றிய விவரம் வருமாறு; சிந்த்வாரா மாவட்டத்தில் கல்கோட்டி திவாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஹர்த்யால் சிங். கூலித்தொழிலாளியான இவர் தமது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது 9 வயது மகன் வீட்டில் நண்பர்களுடன் இருந்துள்ளார்.
கார்ட்டூன்
நேரம் செல்லவில்லை, போரடிக்குது என்று எண்ணியதால் அங்கிருந்த செல்போனை எடுத்துள்ளார். போனில் சார்ஜ் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர், சார்ஜ் போட்டபடியே தமது நண்பர்களுடன் கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்துள்ளார். வெடித்தது செல்போன்
கார்ட்டூனில் அவர் மூழ்கி இருக்க, திடீரென அந்த செல்போன் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வீட்டில் டமால் என்று வெடித்தது போன்று சத்தம் கேட்க, பீதி அடைந்த ஹர்த்யால் சிங், தமது மனைவி மற்றும் உறவினர்களுடன் அங்கு ஓடி வந்துள்ளார். அங்கே 9 மகன் 2 கைகளில் பலத்த காயங்களுடன் கதறியது பார்த்து துடித்தார்.சிகிச்சை
உடனடியாக மகனை தூக்கிக் கொண்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவிக்கு பின்னர் சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயம்
உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுவன் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கைகள், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் தொடர் சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.