sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் பெங்களூரில் 92 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி

/

பெங்களூரில் பெங்களூரில் 92 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி

பெங்களூரில் பெங்களூரில் 92 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி

பெங்களூரில் பெங்களூரில் 92 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி


ADDED : டிச 26, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரில் நீர்வீழ்ச்சியா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆம், பெங்களூரில் நீர்வீழ்ச்சி இருப்பது உண்மை தான்.

பெங்களூரில் இருந்து 40 கி.மீ., துாரத்தில் ஆனேக்கல்லில் இருந்து 5 கி.மீட்டரில் அமைந்துள்ள 'முத்யாலா மடுவு' என்ற சூப்பரான பிக்னிக் ஸ்பாட், உங்களை வரவேற்கும்.

இந்த இடத்தை நீங்கள் அடைந்ததும், நீர்வீழ்ச்சி விழும் இனிமையான ஒலி உங்களை வரவேற்கும். 92 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் நீரை பார்க்கும் போது, 'முத்துக்கள் வரிசையாக விழுந்து கொண்டே இருப்பது போன்று தோன்றும். அதனாலேயே இதை 'முத்துக்கள் பள்ளத்தாக்கு' என்றும் கூறுகின்றனர்.

உகந்த இடம்


முத்யாலா மடுவு பகுதியை சுற்றிலும் மலைகள், வனங்கள் இருப்பதால், மலையேற்ற ஆர்வலர்களுக்கு உகந்த இடமாக இருக்கும்.

நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்ல பாதையும் உள்ளது. இந்திய 'ரோலர்', 'கிங் பிஷர்' உட்பட பல்வேறு வகையான கிளிகள் தென்படுவதால், பறவைகள் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடமாக திகழ்கிறது.

சுற்றுலா பயணியர் வசதிக்காக, கர்நாடக வனத்துறை இருக்கை உட்பட அடிப்படை வசதிகளை உருவாக்கி உள்ளது. வீட்டில் தயாரித்து கொண்டு வரப்பட்ட உணவை, இயற்கையை ரசித்தபடி, குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழலாம்.

அதுபோன்று, இப்பகுதியில் சில உணவகங்கள், கடைகள் உள்ளன. தெருவோர உணவு கடைகளில் சாப்பிட்டு மகிழலாம். முத்யாலா மடுவு நீர்வீழ்ச்சியை பார்க்க, 30 ரூபாய் நுழைவு கட்டணம். அக்டோபர், நவம்பரில் இங்கு செல்ல உகந்த நேரம்.

பெங்களூரு அருகே, 92 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் முத்யாலா மடுவு நீர்வீழ்ச்சி.

ரயிலில் செல்வோர், ஆனேக்கல் ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு, டாக்சி, ஆட்டோவில் செல்லாம்.

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஆனேக்கல்லிற்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. ஆனேக்கல்லில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் முத்யாலா மடுவுக்கு செல்லலாம்.

எப்படி செல்வது?

நமது நிருபர்






      Dinamalar
      Follow us