98.04% சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பின; கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி!
98.04% சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பின; கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி!
ADDED : நவ 05, 2024 09:52 AM

புதுடில்லி: மக்களிடம் புழக்கத்தில் இருந்த, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.04% சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்த போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச் 1ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பி உள்ளது. இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த அக்.,31ம் தேதி நிலவரப்படி, மக்களிடம் புழக்கத்தில் இருந்த, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98.04% சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன. மீதமுள்ள 1.96%, அதாவது ரூ.6,970 கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.