ADDED : அக் 12, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர் : ராம்நகரின் கனகபுரா அடகேஹல்லா கிராமத்தின் சீனிவாஸ். இவரது மனைவி சிந்து. தம்பதியின் மகன் பிரத்வின், 3. சீனிவாஸ் பெங்களூரில் தங்கி இருந்து, ஆட்டோ ஓட்டி வந்தார். இதனால் தாயும், மகனும் தனியாக வசித்தனர்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு, பிரத்வின் விளையாடிக் கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து, சிந்து வெளியே வந்து பார்த்தபோது மகனை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து சிறிது துாரத்தில் இருக்கும், தண்ணீர் தொட்டியில் சென்று பார்த்தபோது, பிரத்வின் உடல் மிதந்தது. தண்ணீர் தொட்டி அருகில் விளையாடியபோது, கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.