ADDED : ஜன 22, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்தது. நான்கு பேர் காயம் அடைந்தனர்.
ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் 11வது கிராஸில் நேற்று காலை ஸ்கார்பியோ கார் வேகமாக வந்தது. அங்குள்ள திருப்பத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
காரில் இருந்த நான்கு பேர் லேசான காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காரின் இரு புறமும் நம்பர் பிளேட் இல்லை. ராபர்ட்சன்பேட்டை பவர்லால் பேட்டையை சேர்ந்தவர் காரை ஓட்டி வந்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.