sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நெல் ஈரப்பதம் குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

/

நெல் ஈரப்பதம் குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் ஈரப்பதம் குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் ஈரப்பதம் குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு


ADDED : ஜன 22, 2025 06:14 PM

Google News

ADDED : ஜன 22, 2025 06:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் இருப்பதாக எழுந்த புகார் குறித்து தஞ்சையில் இன்று மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு, காலதாமதமாகத் துவங்கியதால், பருவமழை தற்போதும் பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக, கனமழை பெய்துள்ளது. மேலும், பனிப்பொழி நிலவி வருவதால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவும் உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர வைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்ய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தஞ்சாவூர், திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்,மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து, அவர்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள நெல்லை மத்திய குழு அதிகாரிகள் மாதிரிகள் சேகரித்தனர்.ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் (பொ) கார்த்திகை சாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் வித்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us