ADDED : அக் 25, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:போதைப் பொருள் விற்ற தம்பதி மற்றும் அவரது மாமியார் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 7ம் தேதி, 274 கிராம் ஹெராயினுடன் சபிகுல் என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணயில், ராஜ்குமார் என்பவரிடம் இருந்து ஹெராயின் வாங்கியதாக கூறினார்.
இதையடுத்து, ராஜ்குமார்,38, அவரது மனைவி மரியம்,25, மற்றும் அவரது மாமியார் பர்வின் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 378 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.