ADDED : மார் 20, 2024 09:06 PM

புதுடில்லி: அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன். வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு என பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி செய்தி சேனலான நியூஸ் 18 குழுமம் சார்பில் ‛‛எழுச்சி இந்தியா'' (ரைசிங் பாரத் ) என்ற தலைப்பில் , நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியது,
* 2019-ல் இந்தியாவின் எழுச்சியை உலக நாடுகள் கண்டன.
* ரைசிங் பாரத் என்பது அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு என்பதன் அர்த்தம்.
* வளர்ச்சி மற்றும் அமைதி நிலவிய நாட்டை பயங்கரவாதிகள் அழிக்க நினைத்தனர்.
* அடுத்த அரசை தீர்மானிப்பதில் 97 கோடி மக்களின் பங்கு உள்ளது.
* இந்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் 2 கோடி உள்ளனர்.
* இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் மிரட்டலாக அமைந்தனர்.
* 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் சொந்தமானது.
* என் மீது 100 அவதூறுகள் வைத்தாலும் என்னை பின்னோக்கி தள்ள முடியாது. அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்.
* இந்தியாவின் ஏற்றுமதி 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சர்யத்துடன் வியந்து பார்க்கின்றன.
* தேசமே முதலில் என்ற அடிப்படையில் பா.ஜ., செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு
* எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் அதிகமான மைல்கல்கள் எட்டப்படும்.
* உலகிலேயே மிகவும் இளைமையான நாடாக இந்தியா உள்ளது.
* தங்களுக்கு முந்தைய ஆட்சியில் பொய்களே நிரம்பி இருந்தன.
* ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
* ஊழலை ஒழிக்க ஆன்லைன் டெண்டர் முறையை அமல்படுத்தினோம்.
* 2014-ல் மிகவும் பின்தங்கியிருந்த தேசத்தை மீட்டெடுத்தோம்.
* மக்களுக்கானவர்களே அரசு அதிகாரிகள். 2014-க்கு முன்பு அரசியல்வாதிகளுக்காகவே அதிகாரிகள் செயல்பட்டனர்.
* அரசு அதிகாரிகள் சமானிய மக்களுக்கு உழைக்க வேண்டியவர்களே.
* ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களின் பதவிகாலம் முடிவடைந்தது.
* எதிர்கட்சிகளிடம் குவியல் குவியலாக பணம் சிக்குகிறது.
* வாழ்க்கையில் ஒரு ஊழல் பகுதி என ராஜிவ் கூறினார்.
* ஊழல் குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை நாங்கள் மாற்றினோம்.
* பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்துள்ளோம்.
* சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல.
* ஏழை மக்களிடமிருந்து உணவு, நலத்திட்டங்கள், உதவிகள் திருடப்பட்டன.
* ஏழை மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மருத்துவ வசதியும் மறுக்கப்பட்டன. வங்கி சேவைகள் கிடைக்காத நிலையே இருந்தது.
* 2019-ல் புதிதாக 5000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. மோடி உத்தரவாதத்திற்கு விளம்பரம் தேவையில்லை.
* நடுத்தர மக்கள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.
* நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்று சேர்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

