தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெளியில் வேஷம்; உள்ளுக்குள் கூட்டு: தி.மு.க., - அ.தி.மு.க.,வை தாக்கிய விஜய்

வெளியில் வேஷம்; உள்ளுக்குள் கூட்டு: தி.மு.க., - அ.தி.மு.க.,வை தாக்கிய விஜய்

வெளியில் வேஷம்; உள்ளுக்குள் கூட்டு: தி.மு.க., - அ.தி.மு.க.,வை தாக்கிய விஜய்

15


UPDATED : அக் 01, 2026 01:08 AM

ADDED : அக் 01, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 01:08 AM ADDED : அக் 01, 2026 01:07 AM

15


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பியதை மறந்து விட்டு, இன்னமும் நாங்கள் தான் முதல்வர், நம் குடும்பம் தான் அதிகாரத்தில் உள்ளது என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அது போன்ற மன்னர் ஆட்சி மனப்பான்மை எனக்கு கிடையாது. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். நான் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை.

மற்றவர்களின் மத நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம்; அதற்காகவே, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என அனைத்திற்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம்; பம்மி பதுங்கி தி.மு.க., போல இருக்க மாட்டோம். அண்ணாதுரை காலத்தில் சாதாரணமானவர்களை எல்லாம் தேர்தலில் நிற்க வைத்து, மன்னர்களை தோற்கடித்தனர் என, தி.மு.க., பொதுச்செயலர் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., காலத்தில் மட்டுமல்லாது நம் காலத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. அதை விட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிற்க வைத்து, மன்னர்கள், குறுநில மன்னர்களை தோற்கடித்துள்ளோம். பொதுச்செயலர் தான் அப்படி பேசினார் என்றால், தி.மு.க., தலைவரும் உண்மையை போட்டு உடைத்துள்ளார். 'கொளத்துார் மக்கள் ஓட்டு போடவில்லை; அந்த மக்களுக்கு கோடானுகோடி நன்றி' எனக்கூறி கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

மேடையில் நடித்து நடித்து, அவருக்கு பழகி விட்டது. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக அவர் வழக்கமாக சொல்வார்; இடைத்தேர்தலுக்கு பின்னும் அவர் அதை சொல்வார். யாருடன் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் சேர்த்து, ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுவார். தி.மு.க., - அ.தி.மு.க.,விற்காக பலர் முட்டு கொடுக்கின்றனர். சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினேன். முன்பு ஜெயலலிதா அதை பற்றி பேசி, தி.மு.க.,வை 'வெளு வெளு' என வெளுப்பார்.

நான் பேசினால், தி.மு.க.,வினர் கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது; அ.தி.மு.க.,வினர் ஏன் கோபப்படுகின்றனர்? எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்று 'தில்'லாக, தி.மு.க.,வை எதிர்ப்பது விஜய் மட்டும் தான். ஆட்சியை கலைக்க, இவர்கள் என்ன திட்டம் போட்டாலும், அது முடியாது. மக்களிடம், தேர்தலை தாண்டிய பாசக்கணக்கு இருப்பதால், ஊழல் கணக்கு போடும் தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்தால், அ.தி.மு.க.,வால் அது முடியாது.

தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் வெளியில் வேஷம் போட்டு, உள்ளுக்குள் கூட்டு வைத்துள்ளனர். அன்று நடந்தது அம்மா ஆட்சி; அடுத்து நடந்தது அப்பா ஆட்சி; இப்போது நடப்பது பிள்ளைகளின் ஆட்சி; நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இது தான் உண்மையான மக்கள் ஆட்சி. இவ்வாறு விஜய் பேசினார்.

கொடி இல்லை; பேனர் இல்லை


தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய, முதல்வர் விஜய் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார்; பின், கோவையிலிருந்து வேனில் தாராபுரம் புறப்பட்டு சென்றார். முன்னதாக கோவை வந்த முதல்வர் விஜய்க்கு, அரசு அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கனிமொழி, சுனில் ஆனந்த், சுகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து வேனில் புறப்பட்ட விஜய்க்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். போக்குவரத்து கெடுபிடிகள் இருந்தாலும், முதல்வரை வரவேற்க பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், தாரை தப்பட்டைகள், செண்டை மேளம், கட்சிக்கொடி கட்டாமல் தவிர்த்தது, பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us