கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்
கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்
ADDED : பிப் 10, 2024 06:18 AM
பனசங்கரி: கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் மீது, பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு பனசங்கரி சித்தண்ணா லே -- அவுட்டில், கிம்ஸ் எனும் கெம்பேகவுடா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள அறிவாற்றல் துறையின் தலைவராக 40 வயது, பெண் டாக்டர் பணியாற்றுகிறார்.
அதே துறையில் பணியாற்றும் டாக்டர் ராஜு, 45, என்பவர், கடந்த சில மாதங்களாக பெண் டாக்டரை பின்தொடர்ந்து செல்வதும், அவரது கையை பிடித்து இழுத்து, பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.
மேலும் பெண் டாக்டர் குறித்து, சக டாக்டர்களிடம் தவறான கருத்துகளை பரப்பியுள்ளார். இதுபற்றி கேட்டதால் பெண் டாக்டரை, ஆபாசமாக பேசித் திட்டி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த பெண் டாக்டர், ராஜு மீது பனசங்கரி போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் ராஜு மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அவரை விசாரணைக்கு அழைக்கவும், போலீசார் முடிவு செய்து உள்ளனர்.