படைவீரர்கள் பாசறை திரும்பும் வண்ணமிகு விழா: டில்லியில் கோலாகலம்
படைவீரர்கள் பாசறை திரும்பும் வண்ணமிகு விழா: டில்லியில் கோலாகலம்
UPDATED : ஜன 29, 2025 06:38 PM
ADDED : ஜன 29, 2025 05:53 PM

புதுடில்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு, வண்ணமிகு அணிவகுப்புடன் அரங்கேறியது. டில்லி விஜய் சதுக்கத்தில் நடந்த நிகழ்வை, பல்லாயிரக்கணக்கான பேர் கண்டு ரசித்தனர்.
![]() |
![]() |
நாட்டின் 76வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் நடந்தது. வண்ண உடை அணிந்த முப்படை வீரர்கள், வாத்திய இசைக்கு ஏற்ப அணிவகுத்துச் சென்றனர்.
![]() |
![]() |
ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினரின் அணிவகுப்பு, கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. ஆயுதக் காவல் படை இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க பல பாடல்களை இசைத்தனர்.
![]() |
![]() |
இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் நேரில் பார்வையிட்டனர்.