மோடியை சந்தித்த அமெரிக்க பார்லி., எம்.பி.க்கள் குழுவினர்
மோடியை சந்தித்த அமெரிக்க பார்லி., எம்.பி.க்கள் குழுவினர்
UPDATED : ஜூன் 20, 2024 11:53 PM
ADDED : ஜூன் 20, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
அமெரிக்க முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் இந்தியா வந்தனர். ஹிமாச்சலில் தர்மாசலாவில் திபெத் மத குரு தலயாய் லாமாவை சந்தித்து பேசினர்.
இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு பெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் புகைப்படம் பதிவேற்றியுள்ளார்.