ADDED : ஜூலை 11, 2025 12:05 AM

பஹல்காம் தாக்குதலுக்கு முன், பின் என, இரு பகுதிகளாக இந்த ஆண்டை பிரிக்கலாம். ஜம்மு - காஷ்மீரில் தற்போது சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது நம்பிக்கையின் செய்தியை காட்டுகிறது. பல்வேறு துறைகளில் காஷ்மீர் விரைவில் சாதனை புரியும்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
பங்கேற்பாரா மோடி!
பிரதமர் மோடி தாயகம் திரும்பி விட்டார். இப்போதாவது, அவர் மணிப்பூருக்கு செல்வாரா? அவரது வருகையை எதிர்பார்த்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அம்மாநில மக்கள் காத்துள்ளனர். விரைவில் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திலாவது, மோடி பங்கேற்பாரா?
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
கூட்டணி வேண்டாம்!
சட்டசபை தேர்தலுக்காகவே மஹா விகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கு இந்த கூட்டணி தேவையில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில், ராஜ் தாக்கரே உடன் உத்தவ் கூட்டணி வைக்க வேண்டும் என, மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா கட்சி