அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதா; தாக்கல் செய்தார் அமித்ஷா
அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதா; தாக்கல் செய்தார் அமித்ஷா
UPDATED : ஆக 20, 2025 05:59 PM
ADDED : ஆக 20, 2025 03:35 PM

புதுடில்லி: 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023ம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது; விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால், அது நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த மசோதா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் லோக்சபா மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.