UPDATED : பிப் 04, 2025 08:33 AM
ADDED : பிப் 04, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் தண்டிகெரே அருகே, நேற்று முன்தினம் மரத்தில் துாக்கிட்டு ஒருவர் சடலமாக தொங்கினார். வருணா போலீசார் விசாரித்தனர்.
இறந்தவரின் மொபைல் போன் வீடியோவில், 'என் நண்பர் மணிகண்டனுக்கு கார் வாங்க, வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். இரண்டு மாதங்கள் தவணை கட்டியவர், அதன் பின் கட்டவில்லை. இதனால் வங்கியினர், எனக்கு போன் செய்து தொந்தரவு கொடுக்க துவங்கினர். என் மனைவி, இரு குழந்தைகளை விட்டு பிரிகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலை செய்து கொண்டவர், மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ், 40, என்பது தெரியவந்தது.

