
பிரதமர் மோடி கடந்த 2024ல் வேலைவாய்ப்பு உடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை பகட்டான விளம்பரத்துடன் அறிவித்தார். ஓராண்டுஆகியும் அந்த திட்டம் குறித்த வரையறை இல்லை. பிரதமரின் வாக்குறுதியை போல் இந்த திட்டமும் காணாமல் போய்விட்டது. ஆனாலும் தினம் ஒரு முழக்கத்தை உருவாக்கி வருகிறார்.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
இளைஞர்களை குழப்புகிறார்!
வேலைவாய்ப்பு குறித்த தவறான தகவல்களை பரப்பி இளைஞர்களை ராகுல் குழப்புகிறார். இதுவரை பா.ஜ., அரசில், 17 கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் கடந்த ஆண்டு 1.25 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
அமித் மாள்வியா, ஐ.டி., பிவு தலைவர், பா.ஜ.,
குற்றம் நடக்காத நாளில்லை!
பீஹாரில் ரவுடிகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. குற்றங்கள் தொடர்கதையாக உள்ளன. மாநிலத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்காத, கொலை, கொள்ளை, கடத்தல் நடக்காத நாளில்லை. உள்துறையை வைத்துஇருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தேஜஸ்வி யாதவ், தலைவர்,ராஷ்ட்ரீய ஜனதா தளம்
உறுதி செய்யப்பட்ட நீதி
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு
அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது. பயங்கரவாதி ராணா
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதால், மும்பை பயங்கரவாத தாக்குதலில்
உயிரிழந்த, 166 அப்பாவிகளின் குடும்பத்திற்கு நீதி உறுதி
செய்யப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர், மத்திய வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

