உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 19, 2024 06:48 AM
அ நிறம் | அளவு
மைசூரு: ஏ.டி.எம்., மையம் ஒன்றில் பாம்பு புகுந்ததால், கிராமத்தினர் கிலி அடைந்தனர்.
மைசூரு, பிரியா பட்டணாவின், பைலுகுப்பே கிராமத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை எங்கிருந்தோ பச்சை பாம்பு மையத்துக்குள் புகுந்தது. பணம் நிரப்பப்பட்டுள்ள இயந்திரத்தின் மீது ஏறியது.
காலையில் பணம் எடுக்க வந்த சிலர், பாம்பை பார்த்து கிலி அடைந்தனர். அதன்பின் பாம்பு பிடி நிபுணருக்கு தகவல் கொடுத்தனர். அவரும் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த பாம்பை பிடித்துச் சென்று, காட்டுப் பகுதியில் விட்டார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
