ADDED : நவ 13, 2024 03:45 AM

மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பருத்தி மற்றும் சோயா பீன்சுக்கு சரியான கொள்முதல் விலையை பா.ஜ., கூட்டணி அரசு வழங்கவில்லை என்பது எனக்கு தெரியும். 'இண்டி' கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம்.
- ராகுல்,
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்,
காங்கிரஸ்
மக்களை ஏமாற்றி விட்டனர்!
காங்கிரசின் வரலாறு பொய் வாக்குறுதிகளால் நிறைந்தது. அவர்களின் வாக்குறுதியை நம்பி ஆட்சியில் உட்கார வைத்த ஹிமாச்சல பிரதேச மக்கள், அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர். பெண்களுக்கு உதவித் தொகை, மின்சார மானியம் போன்ற எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.
- அனுராக் தாக்குர்,
முன்னாள் மத்திய அமைச்சர்,
பா.ஜ.,
பொய் வாக்குறுதி!
கேரளாவில் வக்பு வாரிய இடம் தொடர்பான விஷயத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மக்களை திசை திருப்புகின்றனர். நில பிரச்னையை தீர்த்து வைப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றுகின்றனர்.
- பிரகாஷ் ஜாவடேகர்
முன்னாள் மத்திய அமைச்சர்,
பா.ஜ.,

