'செல்பி' எடுக்க முயன்றபோது யானை தாக்கி தொழிலாளி பலி
'செல்பி' எடுக்க முயன்றபோது யானை தாக்கி தொழிலாளி பலி
ADDED : அக் 26, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்சிரோலி: மஹாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நவேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராமசந்திரா சத்ரே, 23.
இவர் தன் நண்பர்கள் இருவருடன் கட்சிரோலிக்கு கேபிள் பதிக்கும் பணிக்காக சென்றிருந்தார். இந்நிலையில், காட்டு யானை ஒன்று அருகேயுள்ள அபாபூர் வனப்பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் யானையை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த், தன் இரு நண்பர்களுடன் சென்றார்.
வனப்பகுதியை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென யானை ஒன்று அவர்களை நோக்கி வந்தது. அதை ரசித்து பார்த்த மூவரும், யானையுடன் செல்பி எடுக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகில் வந்த யானை, ஸ்ரீகாந்தை தாக்கி மிதித்து கொன்றது; மற்ற இருவரும் ஓடியதால் உயிர் தப்பினர்.