ADDED : மே 14, 2025 06:30 PM
புதுடில்லி:நாட்டின், 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு, டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக்காலம் நீதியின் உயர்ந்த கொள்கைகளை நிலைநிறுத்தி, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதி, சமத்துவம், அரசியலமைப்பின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஜனநாயகத்தின் தூண்களை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்யவும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிக்காலம் -அமையும். தலைமை நீதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,”என, கூறியுள்ளார்.