ADDED : பிப் 16, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர், பூபேந்திர சிங் ஜதாவுன், 45.
கட்சி நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், உ.பி.,யின் கவுதம் புத்த நகர் மாவட்ட கட்சி தலைவராக இருந்தார். 2023 டிச., 28ல், நொய்டாவில் கட்சி அலுவலகத்தில் இருந்த போது, ஜதாவுனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.