ADDED : பிப் 07, 2024 02:20 AM

டில்லியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி, சமீபத்தில் கூறியதாவது:
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை வற்புறுத்தி அரசு சாட்சியாக மாற்றினர். இந்த விசாரணை, கண்காணிப்பு கேமரா இருந்த அறையில் நடந்தது. அந்த கேமரா பதிவுகளை தாக்கல் செய்யும்படி அந்த நபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த வீடியோவில், காட்சிகள் மட்டும் தான் உள்ளன. அவர்களின் உரையாடல் இல்லை. அதை அமலாக்கத்துறையினர் திட்டமிட்டு நீக்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை மறுத்துள்ள அமலாக்கத்துறையினர் கூறியதாவது:
அந்த விசாரணை நடந்தபோது, காட்சிகளை மட்டுமே பதிவு செய்யும் வசதி உடைய கேமரா தான் பயன்படுத்தப்பட்டது. 2023, அக்டோபர் முதல் தான், ஒலியையும் சேர்த்து பதிவு செய்யும் கண்காணிப்பு கேமராக்கள் அமலாக்கத்துறையில் பயன்பாட்டுக்கு வந்தன. அபாண்டமாக பழிசுமத்தும் அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

